இடுகைகள்

கட்டுரை மனநலம்

படம்
தோழமைகளுக்கு வணக்கம். எதிர்பாராத நீண்ட இடைவெளி. இன்றைய கட்டுரை எதைக் குறித்தது? வாருங்கள் பேசுவோம்! " எனக்கு கொலுசு வாங்கி தரமாட்டீங்களா? சரி...பார்ப்போம்..." " நீ என்கிட்டே பேசலைன்னா...நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..." " இந்த ஒலகத்துல என்ன தனியே விட்டுட்டு போக ஒனக்கு எப்படி மனசு வந்துச்சுடி...நான் இனி என்ன செய்வேன்?...நான் இனி இருந்து என்ன செய்யப்போறேன்?..." " நீ எனக்கு துரோகம் செஞ்சுட்டியே...எல்லார் முகத்தையும் நான் எப்புடி பாப்பேன்?... " "எனக்கு வாழவே புடிக்கலை..." " நீ இருக்கிற இடத்துக்கே நானும் வந்திடறேன்டா..." " ஐயோ! என்னய ஏன் இப்டி சித்திரவதை செய்யுறீங்க...நான் செத்துடறேன்..." நீங்கள் மேலே வாசித்தவைகள் கதையிலோ, சீரியலிலோ அல்லது சினிமாவிலோ  வரும் கதாபாத்திரங்களின் பேச்சுக்கள் அல்ல. நிஜத்தில் நம்மோடு உரையாடும்(டிய) மனிதர்களின் மனம் வெதும்பிய பேச்சுக்கள் அவை. அப்பேச்சுகள் வெளிப்படுத்தும் விசயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால், நாம் அவர்கள் மேற்கொள்ளப்போகும் தற்கொலை முயற்சிகளைய...

நண்பர்கள் தின கவிதை

உம் அகம் என்னை ஈர்த்தது காந்தமாய் ஒட்டிக்கொண்டேன் இணைப்பை உடைக்கும் சக்தி என் இறுதிமூச்சுக்கு மட்டுமே உண்டு! அந்நிமிடம் வரை குன்றா நட்பூ வாசத்தோடு வலம் வருவோம் தோழி(ழா) -தேவி பிரபா 04/08/2019

புனைவு- கவிதை

வறண்ட  அணைகள் கடுங்கோடையில் நுரைத்து ஓடும் ஆறு கழிவுநீர் - தேவி பிரபா

"புதிர் விளையாட்டு" மின்னூல் வெளியீடு

படம்
வணக்கம். மனித வாழ்க்கையே ஒரு புதிர் விளையாட்டுத்தான். அதிலும் விடுகதை, குறுக்கெழுத்து, கணிதப்புதிர், அறிவியல் புதிர் முதலானவற்றிற்கு விடைகாண்பதும் கூட ஒருவிதத்தில் நமக்கு உற்சாகத்தையும், மன மகிழ்வையும், உந்துதலையும் தரும் அறிவார்ந்த செயல்பாடு என நாம் உறுதியாகக் கூறலாம். அவ்வகையில், இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் புதிர்விளையாட்டுக்களும் கூட - உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியதாகவும், உங்களது நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கக் கூடியதாகவும் இருக்குமென்று நான் நம்புகிறேன். நீங்கள் பங்குபெற இருக்கும் இப்புதிர் விளையாட்டு - மொத்தம் ஐந்து நிலைகளைக் கொண்டது; தமிழ் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். - தேவி பிரபா

புனைவு - கவிதை - உலக கவிதைத் தினம்

படம்
           உலகக் கவிதைத் தினத்திற்காக                   நட்பு அன்பாய் ஆதரவாய் இனிமையாய் ஈகையாய் உண்மையாய் ஊக்கமாய் எளிமையாய் ஏணியாய் ஐயமில்லாதாய் ஒப்பில்லாதாய் ஓங்கியதாய் ஒளடதமாய் விளங்கும் என் நட்புகளன்றி என் வாழ்வு இல (ஆகஸ்ட்6 , 2017 - நட்பு தினத்தன்று எழுதியது) -தேவி பிரபா

புனைவு - கதை - அகல் மின்னிதழில் பரிசு பெற்ற கதை

படம்
                            பெருவிரல்                                           தேவி பிரபா    இடது கையால் , அருகேயிருந்த கம்பியை இறுகப் பற்றியிருந்தவளை , நடத்துனர் இடித்துக் கொண்டு சென்றிருந்தார் . யாரோ அவள் காலைச் சுரண்டுவது போலிருந்தது . ' மத்தியானம் எடுக்கற பத்துநிமிச ரெஸ்ட்டும் இவங்களால கெட்டுப்போச்சு ... முதலாளி லீவ் தர மாட்டேங்கிறாருனு ,  ஒத்த பொய்யை சொல்லியிருக்கலாமோ?’  என்றெண்ணியவளின் , முகத்தில் விழுந்த வெயில் எரிச்சலை அதிகமாக்கியிருந்தது .   '  இவங்களால எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு ! ‘ என்று யோசித்தவள் , பெருமூச்சொன்றை வெளியிட்டிருந்தாள் .  அவளது வலது கை பெருவிரலையும் , முகத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் பக்கத்தில் நின்றிருந்த சிறுமி . " வளையோசை கல கலக...

புனைவு - கதை ( தமிழ் சுரபி நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதை)

படம்
போராளி                                                              தேவி பிரபா            நண்பகல் வேளை ஆன படியால் வெளியே சாலையில் பரபரப்பு குறைந்திருந்தது . புகழ் பெற்ற மருத்துவமனையின்  உள்ளே பரபரப்பு அதிகரித்து கொண்டிருந்தது . வெளி நோயாளிகள் பிரிவொன்றில் ராமுவும் , பாக்யாவும் மருத்துவரை காண்பதற்காக காத்திருந்தனர் . எப்பொழுது தங்களது முறை வரும் என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர் . இவர்களின் வரிசை எண்ணை அழைத்திருந்தனர் . உள்ளே சென்றவர் வெளியே வந்த பிறகு இவர்கள் செல்ல காத்திருந்தனர் . மருத்துவரை சந்திக்கும் முன் செய்யவேண்டிய ஆயத்தங்களை செவிலியர் ஒருவர் ஏற்கனவே முடித்து வைத்திருந்தார் . “என்ன ஐயா , அம்மா வரலையா ?” என்று கேட்ட பழக்கப்பட்ட குரலில்  ராமு கண் கலங்க ஆரம்பித்திருந்தார் . தழுதழுத்த குரலில் ராமு “அம்மா இருபத்தஞ்சு நாளைக்கு முந...