கட்டுரை மனநலம்
தோழமைகளுக்கு வணக்கம்.
எதிர்பாராத நீண்ட இடைவெளி.
இன்றைய கட்டுரை எதைக் குறித்தது?
வாருங்கள் பேசுவோம்!
" எனக்கு கொலுசு வாங்கி தரமாட்டீங்களா? சரி...பார்ப்போம்..."
" நீ என்கிட்டே பேசலைன்னா...நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..."
" இந்த ஒலகத்துல என்ன தனியே விட்டுட்டு போக ஒனக்கு எப்படி மனசு வந்துச்சுடி...நான் இனி என்ன செய்வேன்?...நான் இனி இருந்து என்ன செய்யப்போறேன்?..."
" நீ எனக்கு துரோகம் செஞ்சுட்டியே...எல்லார் முகத்தையும் நான் எப்புடி பாப்பேன்?... "
"எனக்கு வாழவே புடிக்கலை..."
" நீ இருக்கிற இடத்துக்கே நானும் வந்திடறேன்டா..."
" ஐயோ! என்னய ஏன் இப்டி சித்திரவதை செய்யுறீங்க...நான் செத்துடறேன்..."
நீங்கள் மேலே வாசித்தவைகள் கதையிலோ, சீரியலிலோ அல்லது சினிமாவிலோ வரும் கதாபாத்திரங்களின் பேச்சுக்கள் அல்ல.
நிஜத்தில் நம்மோடு உரையாடும்(டிய) மனிதர்களின் மனம் வெதும்பிய பேச்சுக்கள் அவை. அப்பேச்சுகள் வெளிப்படுத்தும் விசயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால், நாம் அவர்கள் மேற்கொள்ளப்போகும் தற்கொலை முயற்சிகளையும், தற்கொலைகளையும் தடுக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் பத்தாம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்க பட்டு வருகிறது.
உலகளவில் நாற்பது நொடிகளுக்கொரு முறை தற்கொலையால் ஒரு மரணம் நிகழ்கிறது. உலகளவில், பதினைந்து முதல் இருபத்தொன்பது வயது வரையிலான இளைஞர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் தற்கொலை இரண்டாமிடம் வகிக்கிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளையும் தற்கொலை விட்டு வைப்பதில்லை.
தற்கொலையை தடுக்க பல்வேறு வழிவகைகளை கையாண்டாலும் அவற்றில் முக்கியமானவை: காது கொடுத்து கேட்பது, மடை மாற்றுதல், ஆற்றுப்படுத்துதல்.
ஒரு சக மனிதனால் இன்னொரு சக மனிதனின் உணர்வு போராட்டத்தை புரிந்து கொள்ள இயலும்- முயற்சித்தால்.
நம்முடைய காதுகள் திறந்தே இருக்கட்டும்!
சக மனிதனை தற்கொலையிலிருந்து மீட்கலாம்!
இணைந்து கொள்ளுங்கள் எங்களோடு!
(இனி வரும் நாட்களில் இவற்றைப் பற்றி
விரிவாக பேசலாம்)
நன்றியுடன் தேவி பிரபா.

கருத்துகள்
கருத்துரையிடுக