கட்டுரை மனநலம்
தோழமைகளுக்கு வணக்கம். எதிர்பாராத நீண்ட இடைவெளி. இன்றைய கட்டுரை எதைக் குறித்தது? வாருங்கள் பேசுவோம்! " எனக்கு கொலுசு வாங்கி தரமாட்டீங்களா? சரி...பார்ப்போம்..." " நீ என்கிட்டே பேசலைன்னா...நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..." " இந்த ஒலகத்துல என்ன தனியே விட்டுட்டு போக ஒனக்கு எப்படி மனசு வந்துச்சுடி...நான் இனி என்ன செய்வேன்?...நான் இனி இருந்து என்ன செய்யப்போறேன்?..." " நீ எனக்கு துரோகம் செஞ்சுட்டியே...எல்லார் முகத்தையும் நான் எப்புடி பாப்பேன்?... " "எனக்கு வாழவே புடிக்கலை..." " நீ இருக்கிற இடத்துக்கே நானும் வந்திடறேன்டா..." " ஐயோ! என்னய ஏன் இப்டி சித்திரவதை செய்யுறீங்க...நான் செத்துடறேன்..." நீங்கள் மேலே வாசித்தவைகள் கதையிலோ, சீரியலிலோ அல்லது சினிமாவிலோ வரும் கதாபாத்திரங்களின் பேச்சுக்கள் அல்ல. நிஜத்தில் நம்மோடு உரையாடும்(டிய) மனிதர்களின் மனம் வெதும்பிய பேச்சுக்கள் அவை. அப்பேச்சுகள் வெளிப்படுத்தும் விசயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால், நாம் அவர்கள் மேற்கொள்ளப்போகும் தற்கொலை முயற்சிகளைய...