"புதிர் விளையாட்டு" மின்னூல் வெளியீடு

வணக்கம்.

மனித வாழ்க்கையே ஒரு புதிர் விளையாட்டுத்தான். அதிலும் விடுகதை, குறுக்கெழுத்து, கணிதப்புதிர், அறிவியல் புதிர் முதலானவற்றிற்கு விடைகாண்பதும் கூட ஒருவிதத்தில் நமக்கு உற்சாகத்தையும், மன மகிழ்வையும், உந்துதலையும் தரும் அறிவார்ந்த செயல்பாடு என நாம் உறுதியாகக் கூறலாம்.

அவ்வகையில், இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் புதிர்விளையாட்டுக்களும் கூட - உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடியதாகவும், உங்களது நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கக் கூடியதாகவும் இருக்குமென்று நான் நம்புகிறேன்.

நீங்கள் பங்குபெற இருக்கும் இப்புதிர் விளையாட்டு - மொத்தம் ஐந்து நிலைகளைக் கொண்டது; தமிழ் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.


- தேவி பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கட்டுரை - மனநலம்