இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புனைவு - கவிதை - உலக கவிதைத் தினம்

படம்
           உலகக் கவிதைத் தினத்திற்காக                   நட்பு அன்பாய் ஆதரவாய் இனிமையாய் ஈகையாய் உண்மையாய் ஊக்கமாய் எளிமையாய் ஏணியாய் ஐயமில்லாதாய் ஒப்பில்லாதாய் ஓங்கியதாய் ஒளடதமாய் விளங்கும் என் நட்புகளன்றி என் வாழ்வு இல (ஆகஸ்ட்6 , 2017 - நட்பு தினத்தன்று எழுதியது) -தேவி பிரபா

புனைவு - கதை - அகல் மின்னிதழில் பரிசு பெற்ற கதை

படம்
                            பெருவிரல்                                           தேவி பிரபா    இடது கையால் , அருகேயிருந்த கம்பியை இறுகப் பற்றியிருந்தவளை , நடத்துனர் இடித்துக் கொண்டு சென்றிருந்தார் . யாரோ அவள் காலைச் சுரண்டுவது போலிருந்தது . ' மத்தியானம் எடுக்கற பத்துநிமிச ரெஸ்ட்டும் இவங்களால கெட்டுப்போச்சு ... முதலாளி லீவ் தர மாட்டேங்கிறாருனு ,  ஒத்த பொய்யை சொல்லியிருக்கலாமோ?’  என்றெண்ணியவளின் , முகத்தில் விழுந்த வெயில் எரிச்சலை அதிகமாக்கியிருந்தது .   '  இவங்களால எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு ! ‘ என்று யோசித்தவள் , பெருமூச்சொன்றை வெளியிட்டிருந்தாள் .  அவளது வலது கை பெருவிரலையும் , முகத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் பக்கத்தில் நின்றிருந்த சிறுமி . " வளையோசை கல கலக...

புனைவு - கதை ( தமிழ் சுரபி நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதை)

படம்
போராளி                                                              தேவி பிரபா            நண்பகல் வேளை ஆன படியால் வெளியே சாலையில் பரபரப்பு குறைந்திருந்தது . புகழ் பெற்ற மருத்துவமனையின்  உள்ளே பரபரப்பு அதிகரித்து கொண்டிருந்தது . வெளி நோயாளிகள் பிரிவொன்றில் ராமுவும் , பாக்யாவும் மருத்துவரை காண்பதற்காக காத்திருந்தனர் . எப்பொழுது தங்களது முறை வரும் என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர் . இவர்களின் வரிசை எண்ணை அழைத்திருந்தனர் . உள்ளே சென்றவர் வெளியே வந்த பிறகு இவர்கள் செல்ல காத்திருந்தனர் . மருத்துவரை சந்திக்கும் முன் செய்யவேண்டிய ஆயத்தங்களை செவிலியர் ஒருவர் ஏற்கனவே முடித்து வைத்திருந்தார் . “என்ன ஐயா , அம்மா வரலையா ?” என்று கேட்ட பழக்கப்பட்ட குரலில்  ராமு கண் கலங்க ஆரம்பித்திருந்தார் . தழுதழுத்த குரலில் ராமு “அம்மா இருபத்தஞ்சு நாளைக்கு முந...

கட்டுரை மனநலம் - தேர்வுக்கு தயாராக - வெற்றி உங்களுக்கே

படம்
வெற்றி உங்களுக்கே! நண்பர்களே, இதோ 2018-ஆம் கல்வியாண்டின் இறுதியில் நாம் இருக்கின்றோம். பள்ளிப் பயிலும் மாணவர்கள் அனைவரும் தத்தமது இறுதித்தேர்வுகளுக்கான ஆயத்தப்பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்வென்றாலே, நம் எல்லோரிடத்திலுமே பதட்டம்தான். மாணவர்களது பதட்டம் அவர்களுடைய பெற்றோர்களையும் தொற்றியிருக்கக்கூடும். இது இயல்பபே. இவ்வுலகில் பதட்ட உணர்வுகளுக்கு ஆட்படாத மனிதர்களே இல்லை. எனினும், அவற்றை முறையாகக் கையாளத் தெரிந்திருந்தாலே போதும். வெற்றியை ஈட்டுவது அத்தனை கடினமில்லை. இக்கட்டுரையில், தேர்வுகளை எவ்வாறு நாம் பதட்டமின்றி எதிர்கொண்டு வெற்றிப்பெறுவது என்பதைப் பற்றி காணவிருக்கிறோம். இது தேர்வுகளை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும்கூட நிச்சயம் உதவிகரமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன். (1) ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்: தேர்வு நாட்களிலும், அதற்கு ஆயத்தமாகும் வேளைகளிலும் - பதப்படுத்தப்பட்ட உணவுகள்; எண்ணையில் பொரித்த உணவுகள்; துரித உணவுகள் மற்றும் காரம் மிகுந்த உணவுகள் முதலியவற்றை அறவே தவிர்த்துவிடுதல் நலம். முடிந்தவரைக்...