இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுரை - மனநலம்

தோழமைகளுக்கு வணக்கம்,      அறிவியலும், தொழில்நுட்பங்களும் இன்றைக்கு எத்தனையோ தூரம் வளர்ந்திருக்கின்றன. உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் கூட, இன்று மக்களிடத்தில் மிகுந்திருக்கிறது. தலைமுடி பராமரிப்பு துவங்கி முகக்கட்டு சீரமைப்பு; முகப்பொலிவு மற்றும் மூக்குக் கண்ணாடிக்கு மாற்றான அதிநவீன சிகிச்சை முறைகள்; பற்கள், ஈறுகள் சீரமைப்பு; உடற்கட்டு பராமரிப்பு; உடல் எடை குறைப்பு; தேவையற்ற கொழுப்புகளை நீக்குதல்; பாத பராமரிப்பு உட்பட மற்றும்பல உடல் புறத்தோற்ற விடயங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கின்றனர். அவை சம்பந்தமான விளம்பரங்களே, இன்றைய அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தையும் பெருவாரியாக ஆக்கிரமித்திருப்பதை நாம் காண்கிறோம். மக்கள் தமது உடல்நலம் மற்றும் புறத்தோற்றத்திற்கு தரும் முக்கியத்துவத்தை, அவரவர் மனநலம் குறித்த விடயங்களுக்குத் தருகின்றனரா என்றால் - நிச்சயமாக இல்லை என்பதே பதிலாகும். மனநலம் குறித்த விழிப்புணர்வு கூட, அவர்களிடத்தில் இல்லாதிருப்பதை காணமுடிகிறது. அது சார்ந்த புள்ளிவிபரங்களும் கூட அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே இருக்கின்றன. இயல்பிற்கு மாறா...

புனைவு

வட்டார வழக்கு- நெல்லை வாட்ஸ் அப் ...வாட்ஸ் அப்...வாட்ஸ் அப் ஒத்தை பொன்மொழிய பாக்க போயி , இப்படி நொந்து போய் கெடப்பேனா ? என் செவனனேயிருந்தேன் . ஒருநா ஒரு பெரியவர் , "வாட்ஸ்அப்ல  அவன் அவன் என்னமா ஸ்டேட்டஸ் போடுதான் தெரியுமா ?  ஒருத்தன் வள்ளலார் பொன்மொழிகள் போடுதான் இன்னொருத்தன்  சுகிசிவம் பேச்சை போடுதாம் ... பிற ஒருத்தன் ரமண மகரிஷி பொன்மொழிகள் போடுதான்னாரு ...  பாருங்கலேன்னார் .சூப்பராயிருக்கும்னார்". "அது மட்டுமில்ல அவனவன் சண்டை போட்ட ஒண்ணு , சமாதானம் ஆன ஒண்ணு ... கூடிக் கொம்மரிச்சம் போட்டா ஒண்ணுனு போடுதது வேடிக்கையாயிருக்கும்ன்னார்". நானும் மண்டையாட்டிட்டு பாக்க வந்தேன் . பொன்மொழிய மட்டும் பாத்துட்டு போயிருந்தேன்னா புண்ணாயிருக்க மாட்டேன் . எஞ்சேக்காளி புள்ளைக , வேலை பாக்குத இடத்து புள்ளைங்கன்னு சன்ன ஜனம்  அப்டேட் பண்ணுதுங்க . முதல்ல குழந்தைங்க  போட்டோ போடுதுங்களேன் பார்த்தேன் . அப்புறமா பாத்தா  பட்டு புடவை கட்டினாலே ஒருத்தி அப்டேட் பண்ணிடுதா . இன்னொருத்தி சுடிதார் புதுசு வாங்கினாலே அப்டேட் பண்ணிடுதா . இன்னும் புது நைட்டிய தான் கண்ணைக் கொண்ட...

புனைவு

வட்டார வழக்கு- நெல்லை எழுத்தாளர் வ.மணிகண்டனின் "நிசப்தம்" வலைத்தளத்தில் வெளியானதிது மண்டையடி தைலம் - தேவி பிரபா   6/25/2018 11:48:00 AM 'எங்கூர்ல ஒரு அசலூர்க்காரரு வந்து கிருஷ்ணன் வீடு எங்கிருக்கு? எப்புடி போவணும்னு  கேட்டுகிட்டு வந்தாரு . அங்கிட்டு ஊர் மடத்துல உக்காந்துக்கிட்டு  தாயம் விளையாடுதவுகளைத் தவுத்து, மத்த  அம்புட்டு ஆம்பளைகளும் எந்திச்சு நின்னு  என்ன ஏதுன்னாக  .  "எதுக்காவேண்டி நீங்க வந்திருக்கீக" ன்னாக ... வந்தவரு பதில் சொல்லிட்டு இருக்காங்குள்ளேயும்,  பொறுக்காத  ஒருத்தர்,  "கண்ணாடி கிட்ணன் வீட்டுக்கு போகுதீகளா  இல்ல... கொழும்புக் கார கிட்ணனனை கேக்குதீ்களா... இல்ல கோணவாய் கிட்ணன் வீட்டுக்கா?" ன்னாராம் . விலாசம் கேட்டவருக்கு இதெல்லாம் எங்கிட்டுக்கூடி தெரியும்? ஒத்தக் கேள்விக் கேட்டுட்டு, இம்புட்டு தும்பத்தை ஒரு மனுசன் அனுபவிக்கணுமானு அவருக்கு கண்டிப்பா வெளம் வந்திருக்கும். ஆனா, என்ன செய்ய சொல்லுதீக?  எங்கூரு காரங்களே அப்பிடித்தான் . இதே அந்த அசலூர்க்கார் இவுககிட்டே, விசாரிக்கலைன்னு வையிங்க நிம்ம...

நமக்காக - படங்களும் சொற்றொடர்களும்

படம்

புதிர் விளையாட்டு

அடைப்புக்குறிகள் சுட்டும் எழுத்துகளையெல்லாம் ஒன்று சேர்த்தால், ஒரு விசாரிப்பு மற்றும் பழைய பாடல் வரி ஒன்றும் வரும். 1.விடத்திற்கு வேறு பெயர் மூன்றெழுத்தில்  (இதிலிருந்து முதலெழுத்தை எடுத்துக் கொள்ளுங்கள்) 2.அமீர்கானின் படம் மூன்றெழுத்தில்    ( முதலெழுத்தை ஏற்கனவே கண்டறிந்த எழுத்தோடு இணைத்துக் கொள்ளுங்கள்) 3. உலகம் போற்றும் அகிம்சாவாதி மூன்றெழுத்தில்  (இதிலிருந்து இரண்டாமெழுத்தை இணைத்துக்கொள்ளுங்கள்) 4.கொடையின் வேறு பெயர்  மூன்றெழுத்தில்  (முதலெழுத்தை ஏனையவற்றோடு இணையுங்கள்) 5. ஒரு இந்திய மாநிலத்தின் தலைநகர்  மூன்றெழுத்தில்   (கடைசியெழுத்தை இணையுங்கள். விடை கிடைக்கும்) உருவாக்கம்-தேவி பிரபா
கற்பதுவும்;கற்பிப்பதுவுமாக நீளும் பாதைகளை  வாசித்தறிய வருகை தரும் தோழமைகளுக்கு வணக்கம். உங்களது பயணம் நல்வரவாகுக! நட்புடன், தேவி பிரபா.